Monday, April 25, 2011

Regarding Hindi Language


தமிழனுக்கு இந்தி தேவையில்லையா? - கருணாநிதியின் துரோகம்!

ஆண்டாண்டு காலமாக திராவிட முன்னேற்ற கழகம் இந்தியை எதிர்த்து தமிழர்களின் அடிப்படை உரிமையை வேட்டையாடுவது பலரும் அறிந்த செய்தி. இந்தி எதிர்ப்புக்குக் கருணாநிதி விளக்கம் கூறும்போது, "நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை; இந்தி ஆதிக்கத்தையே எதிர்க்கிறோம்" என்கிறார். இது, "நெருப்பு சுடும்; அதனால் தமிழகம் முழுவதும் தீப்பெட்டியைத் தடை செய்யவேண்டும்" என்பது போல் இருக்கிறது.
 
 
கருணாநிதி இந்தியை ஏன் எதிர்க்கிறார், பிறகு ஏன் குழப்புகிறார் என்பது புரியாத புதிராக இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் கபில்சிபல் "அனைத்து மாநிலங்களிலும் இந்தி மொழி பாடமாக்க வேண்டும்" என்று யோசனை தெரிவித்தார். உடனே தமிழக கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, "தமிழகத்தில் இந்தியை அனுமதிக்க முடியாது" என்று பதில் அறிக்கை விட்டார். இந்த அறிக்கையின் உள் நோக்கம் கருணாநிதியை மகிழ்விக்கவேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன இருக்கமுடியும்?.

தமிழர்கள் ஒரு தேசிய மொழியைக் கற்பதில் தவறு என்ன? ஒரு படித்த கல்வி அமைச்சரே தனது தலைவர் திருப்திக்காக இந்தியை எதிர்ப்பது வேலியே பயிரை மேய்வது போல இருக்கிறது. ஒரு அமைச்சர் ஒரு அறிக்கை விடுவதற்கு முன்பு அதன் சாதக பாதகங்களை யோசிக்கவேண்டும். இன்று பிற மாநிலங்களில் இந்திமொழி உள்ளது; அவர்கள் எதில் குறைந்துவிட்டார்கள்? இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களுக்கு நாம் சென்று அங்குள்ள ரிக்ஸா ஓட்டியிடம் ஆங்கிலம் பேசினால் அவனுக்கு என்ன புரியும்? நமக்கு தமிழையும், ஆங்கிலத்தையும் விட்டால் வேறு என்ன தெரியும்?.

நமது பக்கத்து மாநிலமான கேரளாவைச் சேர்ந்தவர்கள், செல்வம் கொழிக்கும் வளைகுடா பகுதிகளில் உயர்மட்ட வேலைகளிலிருந்து கீழ்மட்டம் வரை கோலோச்சும்போது, தமிழர்கள் பெரும்பான்மையோரும் அப்பாவிகளாக, கீழ்மட்டத்திலேயே தலையெடுக்க முடியாமல் நசிந்து போவதற்குக்மொழி மேலாண்மையும் ஒரு காரணம் என்பது வளைகுடாக்களில் பயணிக்கும் தமிழக அரசியல்வாதிகளில் எவருக்குமே இதுவரை புரியவில்லையா?

வெளிநாடுகளில் மட்டுமின்றி தமிழகத்திலும்கூட சில வேளைகளில் இப்பரிதாப தமிழன் மொழி புரியாமல் தன்னைத் தானே கேவலப்படுத்திக் கொள்கிறான். சான்றுக்குச் சில:

ஒரு வருட காலத்துக்கு முன்பு டிவி யில் ஒரு தமிழ் திரைபட நகைச்சுவை காட்சியைப் பார்த்து அதிர்ந்து போனேன். அந்தக் காட்சியில் ஒரு இந்தி வாசகம் பயன்படுத்தப்பட்டு இருந்தது. அந்த வாசகத்தைத் தமிழில் மொழி பெயர்த்தால் மிக பயங்கரமான அச்சில் பதிக்கமுடியாத ஆபாச வார்த்தையாக இருந்தது. அப்போ இந்தத் தவறு எப்படி நடந்தது? தமிழ் சினிமாக்களின் தணிக்கை அதிகாரிகளுக்குக் கூட இந்தி தெரியவில்லை என்பதுதானே? அவர்களுக்கு இந்தி தெரிந்து இருந்தால் அந்த வாசகம் என்ன, காட்சியையே நீக்கி இருப்பார்கள்.
இந்தக் கொடுமை பாடல்களையும் விட்டுவைக்கவில்லை. சமீபத்திய தமிழ் பாடல் ஒன்றில் "படுவா" என்ற இந்தி சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது  இதற்கு ஆங்கிலத்தில் PIMP (பிம்ப்) என்றும் தமிழில் "கூட்டிக் கொடுப்பவன்" என்றும் சொல்லலாம்! எவ்வளவு அசிங்கம். திரைப்படத்தின் மொழி தமிழ், பயன்படுத்தப்பட்ட சொற்கள், இந்தி மொழியிலுள்ள தரம்கெட்ட ஆபாச சொற்கள். ரசிப்பதும் சிரிப்பதும் தமிழர்கள்! ஆனால் அர்த்தம் மட்டும் தெரியாது! இத்தகைய படங்களின் பெயர்கள் தமிழில் இருந்தால் அரசு மானியம் வேறு! என்ன பரிதாபம்!!
மக்கள் விழிப்புணர்வு பெறவில்லை, அரசும் திருந்தவில்லை! நான் மட்டும் என்னசெய்வேன்?.  மகா கவி அல்லாமா இக்பால் அவர்களின் அற்புத வரிகளில் ஒன்று உள்ளது, "நீங்கள் எந்த ஒன்றுக்கும் ஆசை படுவதற்கு முன்னால் அதற்கு உங்களை நீங்களே தயார்படுத்திகொள்ளுங்கள்". எவ்வளவு அருமையான சிந்தனை!

அரசியல்வாதிகள் பதவிக்கு ஆசைபடுகிறார்களே தவிர அதற்கு அவர்கள் தகுதியானவர்களாக இல்லை என்பதே உண்மை! உதாரணம் மத்திய அமைச்சர் அழகிரி! ஆங்கிலமும் தெரியாது, இந்தியும் தெரியாது! நாடாளுமன்றத்தில் பேசவும் பயப்படுகிறார். டெல்லி செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுக்கவும் பயப்படுகிறார். பதவியும் அதிகாரமும் இருந்து என்ன செய்ய? இதற்கு ஒரே தீர்வு, இந்தி மொழியைப் பள்ளியில் கட்டாயப் பாடமாக கொண்டு வரவேண்டும் என்பதுதான். அது அரசியல் கட்சிகளால்தான் முடியும்.

அரசியல் கட்சிகள் மக்களின் நலனுக்காகவே தவிர, மக்களின் சுயமரியாதையையும், அடிப்படை உரிமையையும் பிடுங்குவதாக இருக்கக்கூடாது என்பதை அரசியல்வாதிகள் உணர வேண்டும். இந்தத் தலைமுறை தொடங்கி, இந்தி கற்க ஆரம்பித்தால் எதிர்காலத்தில் தமிழர்கள் தமிழகம் தாண்டி பிழைப்பார்கள்! நமது வாழ்வாதாரமும் சிறக்கும் என்பதில் ஐயம் இல்லை என்பது என்னுடைய தொலை நோக்கு சிந்தனை. சம்பந்தப்பட்டவர்கள் உணர்வார்களா!

Saturday, April 16, 2011

tharga


Tuesday, March 8, 2011

சுன்னத்தா பித்அத்தா...?

at Sunday, September 26, 2010 Posted by Ruqaya Abdullah
அஸ்ஸலாமு அலைக்கும்.!!அளவற்ற அருளாளன் நிகரே இல்லா அன்புடையவன் அந்தவல்லோன் அல்லாஹுவின் பெயர் கொண்டு ஆரம்பம் செய்கின்றேன்
சுன்னத் என்பது நபியவர்கள் எதை செய்தார்களோ மேலும் எதை செய்யுமாறுமக்களுக்கு ஏவினார்களோ அவற்றை பின்பற்றுவதே ஆகும்
அல்லாஹ்வுக்கும், (அவன்தூதருக்கும் கீழ்படியுங்கள்;. நீங்கள் (அதனால்அல்லாஹ்வினால்கிருபை செய்யப்படுவீர்கள். (3;132)அல்லாஹு ஆகிய அவனுக்கும்அவனது தூதருக்கும் பணியுமாறு அல்லாஹு நம்மை ஏவுகின்றான்இதில்ஒன்றையேனும் நிராகரிக்கும் போது அவன் முஷ்ரிக் அல்லது முனாபிக் எனும்நிலையை அடைய நேர்கிறது ( நௌதுபில்லாஹி மின்ஹா)அல்லாஹுவை ஈமான்கொண்டு அவனிடமே உதவி தேட வேண்டும் நாம் கை ஏந்தி கேட்க தகுதியானவன் ,எமக்கு பதில் தர கூடியவன் , எமக்கு பாதுகாவலன் எம்மை படைத்தவனே அன்றிஅவனால் படைக்க பட்டவைகள் அல்ல.அவனையன்றி நீங்கள் யாரைபிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களேஉதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள். (7;197)நிச்சயமாக என்பாதுகாவலன் அல்லாஹ்வேஅவனே வேதத்தை இறக்கி வைத்தான்அவனேநல்லடியார்களைப் பாதுகாப்பவன் ஆவான். (7;196)நிச்சயமாக அல்லாஹ்வையன்றிஎவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோஅவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளேநீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் -அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்! (7;194மனிதர்களேஓர் உதாரணம்சொல்லப்படுகிறதுஎனவே செவிதாழ்த்திக் கேளுங்கள்நிச்சயமாகஅல்லாஹ்வையன்றி (வேறுஎவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ,அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது இன்னும்,அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனைஅந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது தேடுவோனும்,தேடப்படுவோனும் பலஹீனர்களே. (22;73)அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்)பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப் பூச்சியின்உதாரணம் போன்றது அது (தனக்காகஒரு வீட்டைக் கட்டியது ஆனால் நிச்சயமாகவீடுகளிலெல்லாம் மிகவும் பலஹீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும் - இதைஅவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக்கொண்டவற்றின் பலஹீனத்தை அறிவார்கள்). (29;41)அன்றியும்உமக்கும்உமக்குமுன் இருந்தவர்களுக்கும்வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், "நீர் (இறைவனுக்குஇணை வைத்தால்உம் நன்மைகள் (யாவும்அழிந்து,நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்" (என்பதுவேயாகும்). (39;65)ஆகவேநீர்அல்லாஹ்வையே வணங்குவீராகமேலும்அவனுக்கு நன்றி செலுத்துபவர்களில்நின்றும் இருப்பீராக! (39;66)கியாம நாள்வரை (அழைத்தாலும்தனக்கு பதில் கொடுக்கமாட்டாத - அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள்யார்தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது. (46;5)உண்மையானஅழைப்பு (பிரார்த்தனைஅவனுக்கே உரியதாகும்எவர் அவனை அன்றி(மற்றவர்களைஅழைக்கின்றார்களோஅவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தரமாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப் போரின் உதாரணம்;) தண்ணீர்தன் வாய்க்கு(த் தானாகவந்தடைய வேண்டுமென்றுதன் இருகைகளையும் விரித்துஏந்திக் கொண்டு இருப்பவனைப்போல் இருக்கிறது (இவன் அல்லாதுஅது வாயைஅடைந்து விடாது - இன்னும் காஃபிர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிரவேறில்லை. (13;14)தெளிவான அத்தாட்சிகள் இத்தனை இருக்க விழுந்தால் கூட '' யாமுஹிய்யிதீனே '' என்று முஹியிதீனை அழைப்பது சரியாஅவ்லியாக்களிடம் உதவிதேடுவது சரியாஇது நபி வழியா?நபியவர்கள் கூற தாம் கேட்டதாக அபு மர்சத் (ரலி)அறிவிக்கின்றார்கள் கப்ருகளின் பக்கம் தொழவும் வேண்டாம் அதன் பக்கம் உட்காரவும்வேண்டாம் (நூல் முஸ்லிம் )நபியவர்கள் கூறியதாக அபு ஹுரைரா (ரலி)அவர்கள்அறிவிக்கின்றார்கள் உங்களில் ஒருவர் நெருப்பு தணலின் மீது உட்கார்ந்து அதுஅவருடைய உடையை எரித்து அவருடைய உடலில் படுவது கப்ரின் மீது உட்காருவதைவிட சிறந்தது ( நூல்முஸ்லிம்)எனது கப்ரை (கந்தூரிவிழாக்கள் நடக்கும் இடமாகஆக்கிவிடாதீர்கள்உங்கள் வீடுகளையும் கப்ருகளாக ஆக்கிவிடாதீர்கள்நீங்கள்எங்கிருந்த போதும் எனக்காக ஸலவாத்து சொல்லுங்கள்அது என்னை வந்தடையும்அறிவிப்பவர்அபூஹுரைரா (ரலி), (ஆதாரம்அபூதாவுத்.)யஹுதிகளும்நஸராக்களும்தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடங்களாக ஆக்கிக்கொண்டனர்அல்லாஹ்அவர்களைச் சபிப்பானாக அறிவிப்பவர்அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம்.தர்காசெல்வது கபூர் வணக்கம் சரியாஇது சுன்னத்தாகபுரின் முன் நின்று இறைஞ்சுவதுவிளக்கில் எண்ணை ஊற்றி எரிப்பது அதை தொட்டு தலையில் தடவிக்கொள்வது இதுபோன்ற அனாச்சாரங்கள் சரியாஇது சுன்னத்தா?

அல்லாஹ்வுக்கு வழிபடுவதை நேர்ச்சை செய்தவர், (அதை நிறைவேற்றிஅவனுக்குவழிபடுவாராகஅல்லாஹ்வுக்கு மாறுசெய்ய நேர்ச்சை செய்தவர்; (அவ்வாறு அதைநிறை வேற்றிஅவனுக்கு மாறுசெய்ய வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர்;ஸல்லல்லாஹூஅலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்அறிப்பாளர்ஆயிஷா –ரலியல்லாஹூ அன்ஹுஆதாரம் : புகாரீஅஹ்மதுநஸயீதிர்மிதீஇப்னுமாஜா
அவ்லியாக்களுக்கு நேர்ச்சை செய்வது சரியாஇது சுன்னத்தா?காலத்தை திட்டாதீர்கள்காலமாகவும் அல்லாஹுவே இருக்கின்றான் ( நபிமொழி முஸ்லிம்)சபர் மாதம் பீடைஎன்பது சரியா?மவ்லீதுகத்தம் சரியாஆயத்துகளை தாயத்துகளாக அணிந்துகொள்வது சரியா?சலவதுன்னாரிய சரியா?கந்தூரி எனும் பெயரில் ஆடல்பாடல்அரங்கேறுவது சரியா?கொடியேற்றம்கூத்தாட்டங்கள் சரியா?நபிமார்களில் எந்த நபிஇதை செய்து காட்டினார்கள்?குரான்ஹதீஸ் ஆதாரம் இருக்கின்றதா?

"
நீங்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை கவனித்தீர்களாபூமியிலுள்ள எதைஅவை படைத்துள்ளன அல்லது அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா?என்பதை எனக்குக் காண்பியுங்கள்நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்இதற்கு,முன்னேயுள்ள ஒரு வேதத்தையோ அல்லது (முன்னோர்களின்அறிவு ஞானங்களில்மிஞ்சிய ஏதேனும் பகுதியையோ (உங்கள் கூற்றுக்கு ஆதாரமாகஎன்னிடம் கொண்டுவாருங்கள்!" என்று (நபியே!) நீர் கூறுவீராக. (46;4)
இணை வைப்போருக்கு மறுமையில் நிலை என்ன?இன்னும் அவர்கள் மீது நம்முடையதெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால்காஃபிர்களுடைய முகங்களில்வெறுப்பை நீர் அறிவீர்அவர்களிடம் நம் வசனங்களை ஓதிக் காட்டுபவர்களை அவர்கள்தாக்கவும் முற்படுவார்கள். "இன்னும் கொடூரமானதை நான் உங்களுக்குஅறிவிக்கட்டுமா? (அதுதான் நரகநெருப்பு அதனை அல்லாஹ் காஃபிர்களுக்குவாக்களிக்கிறான்மேலும்அது மீளும் இடங்களிலெல்லாம் மிகவும் கெட்டதுஎன்று(நபியே!) நீர் கூறுவீராக. (22;72)ஆகவே, (நபியே!) உம் இறைவன் மீது சத்தியமாக நாம்அவர்களையும், (அவர்களுடையஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர்ப்பித்து)ஒன்று சேர்ப்போம்பின்னர் அவர்களை(யெல்லாம்நரகத்தினைச் சூழமுழந்தாளிட்டவர்களாக ஆஜராக்குவோம். (68) பின்னர்நாம் ஒவ்வொருகூட்டத்திலிருந்தும் அர்ரஹ்மானுக்கு மாறு செய்வதில் கடினமாக - தீவிரமாக -இருந்தவர்கள் யாவற்றையும் நிச்சயமாக வேறு பிரிப்போம். (69) பின்னர்(ந்நரகத்)தில் புகுவதற்கு அவர்களில் (தங்கள் பாவத்தால்முதல் தகுதிவுடையவர்கள் யார்என்பதை நிச்சயமாக நாம் அறிவோம். (19;70)மேலும்அதனைக் கடக்காமல் உங்களில்யாரும் (போகமுடியாது இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும். (71) அதன் பின்னர்தக்வாவுடன் - பயபக்தியுடன் இருந்தார்களே அவர்களை நாம்ஈடேற்றுவோம்ஆனால்அநியாயம் செய்தவர்களை (ந் நரகத்)தில்முழந்தாளிட்டவர்களாக விட்டு விடுவோம். (19;72)நீங்கள் அழைத்தவை மறுமையில்உங்களுக்கு உதவுவார்களாஅன்றியும் மனிதர் ஒன்று கூட்டப்படும் (அந்நாளில்)இவர்கள் அவர்களுடைய பகைவர்களாக இருப்பர்அவர்கள் தங்களை வழிபட்டுக்கொண்டு இருந்ததையும் நிராகரித்து (மறுத்துவிடுவர். (46;6)நீங்கள் செய்பவைகளில்எது சுன்னத் ?இன்னும்எங்கள் கடமை (இறைவனின் தூதுச் செய்தியைவிளக்கமாகஎடுத்துச் சொல்வதைத் தவிர வேறில்லை"( 36;17)இவ்வுதாரணங்களை நாம்மனிதர்களுக்காக விளக்கி வைக்கிறோம் - ஆனால் இவற்றை சிந்தித்தறிவோர் தவிரவேறெவரும் உணர்ந்து கொள்ள மாட்டார்கள். (29;43)செய்பவைகள் சுன்னத்துகளேஇல்லை ஆகவே உங்கள் பெயர் சுன்னத் வல் ஜமாஅத் என்று இருப்பதுநியாயமா?அல்லாஹு நம் அனைவரையும் பாதுகாப்பானாக எம் அனைவருக்கும்ஹிதாயத்தை தருவானாக...ஆமீன்!!!