Monday, May 9, 2011

Regarding America


திர்வர இருக்கின்ற அமெரிக்க தேர்தலில் எதிர்பார்க்கும் வெற்றிக்கான முக்கிய சான்றாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஒசாமாவின் கொலைச் செய்தியை தான் செய்தி மிகப்பெரும் சாதனையாக அறிவித்திருப்பது மிகப் பெரும் முட்டால் தனமாகும்.
                                                                 
அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட விநாடி முதல் குறித்த முஸ்லிம் அமைப்புக்களும் தேசங்களும் குறிவைத்து தகர்க்கப்படுவதும் தாக்கப்படுவதும் உலகம் அறிந்ததே.
                                                                          
 இந்த அனைத்துத் தாக்குதல்களுக்கு பின்னால் எந்த உண்மையும் இல்லை என்பது உலகம் ஏற்றுக்கொண்ட நிதர்சனமே.
இருந்தும் ஏன் ஆப்கான் குண்டுச் சத்தங்களின் தேசங்களில் ஒன்றாக மாறின?
ஏன் அங்குள்ள கைக்குழந்தைகள் முதல் கட்டிலில் காலம் கடத்தும் வயோதிபர்வரை பிணங்களாக பின்னப்படுகிறார்கள்?
குடிக்க தண்ணீர் கூட சரியாக இல்லாத தேசத்தில் ஏன் இரத்தம் ஓட்டப்படுகின்றது?
                                                                                
இரட்டைக் கோபுரம் தகர்த்தப்பட்டதும் ஒரு ஒசாமா பின்லாடன் குறி வைக்கப்பட்டார்.
புதிய செய்தியாக ஒசாமா பின்லாடன் அமெரிக்காவின் சிஜஏ யினரால் கொலை செய்யப்பட்டதாக ஊடகங்கள் முழுதும் ஒரே முலக்கங்கள்.....
இல்லை, இவர் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார் என்றும் பலர் நாடுகளிலிருந்து...........
                                                                                    
ஒரு உயிர் தேவை என்பதற்காக தேசத்தின் மொத்த உயிர்களையும் காவி கொள்வது எந்த உலக நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ள முடியுமான நீதி?
ஆப்கானித்தானிய மக்கள் தீவிரவாதிகள் என்று பலி சுமத்தப்பட்டு கொல்லப்பட்ட எண்ணிக்கையின் அளவுக்கு ஒரு பில் கிளிண்டனையோ ஜோர்ஜ் புஸ்ஸையோ குறிவைத்து இவர்கள் சர்வதேச குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டு இவர்களை கைதுசெய்ய வேண்டும் என்று பிரகடனப்படுத்தப்பட்டு அவர்கள் வாழும் அமெரிக்காவை எந்த அமைப்போ அல்லது அரசாங்கமோ தாக்க முன் வந்தால் அமெரிக்கவுக்குள் எத்தனை உயிர்கள் சேதமாகும்?
அங்குள்ள சொத்துக்களின் நிலை என்ன?
இதனை எந்த உலக நாடுகளும் ஏற்றுக்கொள்ளுமா?
ஏற்றுக்கொள்ளாது என்பது உண்மை என்றால் எப்படி ஆப்கான் அல்லது பகிஸ்தானிய தாக்குதல்களை ஏற்றுக்கொள்வார்கள்?
                                                                            
 நேர்மையாகநடுநிலையுடன் சிந்திப்பவர்கள் இந்த செய்திகளைஎந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
                                                                       
உலக அமைதியை ஒரு உசாமாவின் மரணம் தான் ஈட்டித்தருகிறதுஎன்ற வாதம் எந்த அளவுக்கு முட்டாள் தனமானது?
இது போன்ற செய்திகளை ஏற்றுக்கொண்டு செய்தி ஊடகங்களில் பிரசுரிப்பதையும் கர கோசம் கொடுத்து காது தால்த்தி ஏற்றுக்கொல்கின்ற அறிவிளிகளும் இன்று உலகத்தில் அறிவாளிகளாக சுற்றுவது தான் உலகிற்கு ஏற்பட்டுள்ள அவமானமும் சாபகேடுமாகும்.
                                                                                         
உலக அமைதி வேண்டும் என்று மேடைகளில் சொல்லிக்கொண்டு மேசைக்கு கீழ் ஆயுதம் விற்பதும் விற்கின்ற ஆயுதம் அவசரமாக தீர்ந்து போனால் தான் புதிய ஆயுதம் விற்க முடியும் என்பதற்காக யுத்தங்களை விலை பேசுவதும் தூண்டிவிடுவதும் மேற்கத்தையர்களின் இன்றைய சர்வதேச, அங்கீகரிக்கப்பட்ட வியாபாரமாக மாறி உள்ளது.
                                                                       
 இவர்களிடத்தில் தொடுக்க நினைக்கும் கேள்விகள் சில இருக்கின்றன;:
Few questions can be placed here,
1. America’s Twin tower attacked by Osama bin laden, is it proofed with enough evidence?

2. The number of death by American troops in Afghanistan and Pakistan is acceptable?
3. If any country or group attack or announce a war in America for a particular reason, is it acceptable by American nation or global population?
4. Only Osama bin laden’s death is will make the road to world peace?
5. Is the war against terrorism in Afghanistan will be stopped now after Bin laden’s death?

Tuesday, May 3, 2011

Drumstick


முருங்கை என்னும் கற்பகத் தரு




வீட்டிற்கு ஒரு முருங்கை வளர்த்து வந்தால் குடும்பத்தில் ஆரோக்கியத்திற்கு குறைவு இருக்காது. இதனால் முருங்கையை கற்பகத் தரு என்றே சித்தர்கள் அழைத்தனர். முருங்கையின் பயனை நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்துள்ளனர். இலைகள்வேர்கனி மற்றும் விதை எண்ணெய் என முருங்கையின் அனைத்து பாகங்களுமே மருத்துவக் குணம் கொண்டவை. முருங்கை
முருங்கையில் வைட்டமின்கள்அமினோ அமிலங்கள் மற்றும் தாது உப்புக்கள் உள்ளன. காய் மற்றும் இலைகள் வைட்டமின் சி மிகுதியாகக் கொண்டவை. மொரிங்கஜின்மொரிங்ஜின்னைன்பேரேனால்இண்டோல் அசிடிக் அமிலம்டெர்கோஸ்பெர்மைன்,கரோட்டின்குர்சிடின் ஆகியவை காணப்படுகின்றன.

முருங்கை இலையில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை நீங்கும். முருங்கைக் கீரையை சமைத்து உண்டு வந்தால் உடல் வலுப்பெறும். இரத்தம் சுத்தமடையும். மெலிந்த உடல் உள்ளவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரைஉண்டு வந்தால் உடல் தேறும்.
இலையின் சாறு விக்கல் போக்கும். அதிக அளவில் வாந்தி தூண்டும். சமைத்த இலைகள் சத்துள்ளவை. ஃபுளு காய்ச்சல் மற்றும் சளி போக்கும். கண் நோய்களுக்கு சாறுடன் தேன் கலந்து இமையில் தடவப்படுகிறது. கழலை வீக்கங்களுக்கு இலைப்பசை பற்றாக கட்டப்படுகிறது.


பெண்களுக்கு உண்டாகும் உதிர இழப்பைப் போக்க முருங்கைக்கீரை சிறந்த நிவாரணி. தாய்ப்பாலை ஊறவைக்கும். வாரம் இரு முறையாவது பெண்கள் கண்டிப்பாக முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வயிற்றுப்புண்ணை ஆற்றும். அஜீரணக் கோளாறுகளை நீக்கி மலச்சிக்கலைப் போக்கும். இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை பிரித்து வெளியேற்றும். நீர்ச்சுருக்குநீர்க்கடுப்பு போன்ற வற்றைப் போக்கும்.
உடல்சூட்டைத் தணிக்கும் இதனால் கண்சூடு குறைந்துபார்வை நரம்புகள் வலுப் பெறும். பித்தத்தைக் குறைக்கும். இளநரையைப் போக்கும். சருமத்தைப் பளபளக்கச் செய்யும். முருங்கைக் கீரை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.




நாவின் சுவை யின்மையை மாற்றும் தன்மை கொண்டது. முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும். பித்த நீர் குறையும். வாதபித்தகபத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.
முருங்கைப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து காலையில் கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் வலுவடைவதுடன்நரம்புகள் புத்துணர்வு பெறும்.
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்துஉடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும். முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும். முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும். இதை இயற்கையின் வயகரா எனக்கூறலாம். அதுபோல் முருங்கைப் பூவின் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.
நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். பெண்களுக்கு வெள்ளைப் படுதல் குணமாகி கர்ப்பப் பை வலுப் பெறும். மலர்கள் சிறுநீர்ப் போக்கினைத் தூண்டுபவை. பித்தநீர் சுரப்பினை அதிகரிக்கும். செயலியல் நிகழ்வுகளைத் தூண்டும்.

முருங்கைப் பிஞ்சை எடுத்து சிறிதாக நறுக்கி நெய்யில் வதக்கி அதனை உண்டு வந்தால் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும். இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதில் அதிக கால்சியம் சத்து இருப்பதால் எலும்புகளுக்கு ஊட்டம் கிடைக்கும். எலும்பு மஞ்ஜைகளை பலப் படுத்தி இரத்தத்தைஅதிகம் உற்பத்தி செய்யும். ஆண்மை சக்தியைத் தூண்டும்.


அனைவரும் விரும்பிச் சாப்பிடும் காய் முருங்கைக் காய். அதிக சத்துக்களைத் தன்னகத்தே கொண்டது. உணவில் சுவையை அதிகரிக்கக் கூடியது. மலச்சிக்கலைப் போக்கும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். மூல நோய்க்கு சிறந்த மருந்தாகும். சளியைப்போக்கும். காய்கள் காய்ச்சலுக்கும் வயிற்றுப் புழுக்களுக்கும் எதிரானவை. வேரின் சாறு பாலுடன் கலந்து சிறுநீர்ப் போக்கு தூண்டுவிக்கும் .
ஆஸ்துமாகல்லீரல் மற்றும் கணையங்களின் வீக்கம்ஆகியவற்றை போக்க வல்லது. வேரின் கசாயம் தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டை புண் ஆற்றுகிறது.
விதை எண்ணெய்
இதன் விதையில் இருந்து பயோ டீசல் எடுக்கலாம்சமையல் எண்ணெய் எடுக்கலாம். மேலும் மேனி எழிலுக்கு சுகதாரத்திற்கு,இயந்திரத்திற்கு மசக்கு எண்ணெய் உள்ளிட்ட பல வித பயன்களை தருகிறது விதை எண்ணெய். விதையின் எண்ணெயுடன்சமஅளவில் வேர்க்கடலை எண்ணெய் சேர்த்து மூட்டு வலிக்கு மருந்தாகிறது. நல்ல எண்ணெயுடன்சேர்த்து காதுவலிக்கு தரப்படுகிறது.
முற்றிய முருங்கை விதைகளை எடுத்து காய வைத்து லேசாக நெய்யில் வதக்கி பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால்,ஆண்மை பெருகும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நரம்புகள் பலப்படும்உடல் வலுப்பெறும். உடல் சூடு தணியும்.


சிலர் முருங்கைக்கீரை சமைக்கும் போது அதன் காம்புகளை குப்பையில் போட்டு விடுவார்கள். ஆனால் இந்த காம்பிலும் அதிக மருத்துவக் குணம் உள்ளது. முருங்கை இலைக்காம்புகளை சிறிதாக நறுக்கி அவற்றுடன் கறிவேப்பிலைசீரகம்சின்ன வெங்காயம்பூண்டுசோம்புமிளகு இவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால்நரம்புகள் வலுப் பெறும். தலையில் கோர்த்துள்ள நீர்கள் வெளியேறும். வறட்டு இருமல் நீங்கும். இரு பாலாருக்கும் நல்ல உடல் வலிமையைத் தரக்கூடியது.


முருங்கைப் பட்டையைச் சிதைத்து சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது வைத்து கட்டினால் வீக்கம் குறையும். பட்டையின் சாறுடன் வெல்லப்பாகு கலந்து தலைவலிக்கு மருந்தாக உட்கொள்ளப்படுகிறது.


வேரின் சாற்றுடன் பால் சேர்த்து கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் விக்கல்இரைப்புமுதுகுவலி நீங்கும். வேர்பட்டை,மற்றும் மரப்பிசின் கருச்சிதைவு விளைவிக்கக்கூடியது. முருங்கைப் பிசின் விந்துவைப் பெருக்கும். சிறுநீரைத் தெளிய வைக்கும்.

ஆரஞ்சை போல் மடங்கு வைட்டமின் சி அடங்கியது . பாலில் இருப்பதை போல் மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது. காரட்டில் இருப்பதைப் போல் மடங்கு வைட்டமின் அடங்கியது. வாழை பழத்தை போல் மடங்கு பொட்டாசியம் அடங்கியது. தயிரில் இருப்பதை விட மடங்கு புரோட்டின் அடங்கியது. இரும்பு சத்து அமரிமிதமாக உள்ளது. எந்த கீரையையும் விட 75மடங்கு இரும்பு சத்து அதிகம்.