Saturday, June 11, 2011

tharga anacharangal


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
Respected Brothers of Islam, Assalaamu alaikkum.
May peace, mercy and blessings of Allaahu subhaana huvvata'ala be with you all.
By the grace Allah, this email will meet you in good health and good mood and I pray for that

பாகம் -.......தக்கலை பீரப்பா அவ்லியா...... தர்ஹா வழிபா(கே)டா ???!!!
(Please refer PDF file if you have problem in reading this mail  full in tamil)
முதல் பாகத்தின் முடிவில்  :
நாங்கள் அவ்லியாவிடம் நேரடியாக கேட்கவில்லை  எங்கள் பிரச்சினைகளை அவ்லியாவிடம்  முறையிட்டு அல்லாஹ்விடம் சிபாரிசு செய்ய சொல்லி அல்லாஹ்விடமே  துஆ கேட்கிறோம் என்ற பதில்தான் எல்லோரிடமிருந்து கிடைக்கிறது. 
இன்ஷா அல்லாஹ் 
 -   பாகம் இரண்டில் மீண்டும் விரைவில்  சந்திக்கலாம் - தெளிவை நோக்கி விரிவாக விவாதிக்கலாம்.

இனி இரண்டாம் பாகத்தின் ஆரம்பம் :

நாங்கள் அவ்லியாவிடம் நேரடியாக கேட்கவில்லை  எங்கள் பிரச்சினைகளை அவ்லியாவிடம் முறையிட்டு அல்லாஹ்விடம் சிபாரிசு செய்ய சொல்லி அல்லாஹ்விடமே  துஆ கேட்கிறோம் என்ற பதில்தான் எல்லோரிடமிருந்து கிடைக்கிறது. இந்த முறையைத்தான்  அந்த கால மக்கா   முஷ்ரிக்குகளும் பின்பற்றினார்கள். அல்லாஹ்வை  நம்பினார்கள் அந்த நம்பிக்கையோடு  முன்னர் வாழ்ந்த நல்லடியார்கள் என்று சொல்லப்படுபவர்களின் சிலைகளிடம்  இதே மாதிரியான கோரிக்கைகளைத்தான் வைத்து பிரார்த்தித்தார்கள். இந்த சிலைகள் எங்களை அல்லாவிடம் நெருக்கி வைக்கும் , எங்களுக்காக அல்லாவிடம் முறையிட்டு எங்கள் தேவைகளை   நிறைவேற்றித்தரும் என்று நம்பித்தான் செயல்பட்டார்கள். கஃபத்துல்லாவில் காணப்பட்ட இந்த சிலைகள் எல்லாம்  லாத்து, உஸ்ஸா, மனாத்து, என்கிற மக்கள் நல்லடியார்கள் என்று நம்பியவர்களின் சிலைகள்தான். இதோடு இன்னும் பலவிதமான சிலைகளையும் வணங்கினார்கள். இந்த சிலைகளில் இப்ராஹீம் நபி, இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய சிலைகளும்  இருந்தது.

நபி (ஸல்) அவர்கள் எல்லா சிலைகளையும் அடித்து நொறுக்க சொன்னார்கள்.  இப்ராஹீம் நபி, இஸ்மாயீல் (அலை)  சிலைகளை  தன் கையாலே அடித்து உடைத்தார்கள். அந்த காலத்தில் நல்லடியார்கள் என் சொல்லப்படுபவர்களை சிலைகளாக செய்து வணக்க வழிபாடுகளை செய்து வந்தார்கள் , இன்றைக்கு அதே  பாரம்பரியம், நல்லடியார்கள் என்று சொல்லப்படுபவர்களை அவ்லியாக்கள் என்ற பெயரில் கப்றுகளை உண்டாக்கி அங்கே வணக்க வழிபாடுகளை செய்து வருகிறார்கள். அன்றைக்கு சிலையானது இன்றைக்கு கப்றாக மாறியுள்ளது. ஆக  கான்செப்டில் அனேகமாக மாற்றம் இல்லை தெளிவாகிறது

இன்று  நாம் அதே மக்கத்து முஸ்ரிக்குகளைப் போல, மாற்று மதத்தவர்களை போலவே வணக்க வழிபாடுகளை ஊருக்கு ஊர்  கோயில்களில் சாமி குலதெய்வமாக வீற்றிருப்பதைப் போன்று    ஊருக்கு ஊரு அவ்லியாக்களுக்கு தர்ஹா  கட்டி இன்று வணக்க வழிபாடுகளில், சடங்கு சம்பிரதாயங்களில்  நம்மவர்கள், முஸ்லிம் மக்கள் நமது  இஸ்லாம் காட்டி தராத  தர்ஹா வழிபாடு  , மவ்லீது ,  ஆண்டுப்பெருவிழா , பீரப்பா அவ்லியா பாடியதாக சொல்லப்படும்?! ஞானப்புகழ்ச்சி பாடல் , ஞான மணிமாலை, ஞான நடனம் ,  ஞான குறம் ,  ஞான ரத்தின குறவஞ்சி ,   ஞானப்பால், ஞானப்பூட்டு, ஞான ஆனந்தக்களிப்பு, இன்னும்  பல பாட்டுக்கள்  ,  3 ம், 10 ம், 40 ம் பாத்திஹா,, கப்று அலங்காரம், குத்து விளக்கு , அவுலியாவின் பெயரையும், புகழையும் ?!  சொல்லி அருள் ?! பெற வாரீர்  விளம்பரப்படுத்தி கூட்டம் சேர்த்தல் , பின்னர் உண்டியல் வைத்து பணம் வசூலித்தல் , அவ்லியாவுக்காக   நேர்ந்து ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திகடனை அடைத்தல், எண்ணெய்  , பூ, பழம் பத்தி, சாம்பல்  என காணிக்கைகளை அவ்லியாவின் பெயரால் பிரசாதமாக கொடுத்தல், அவ்லியாவை தரிசிக்க  பலவித அலங்காரங்களுடனும், ஹிஜாபுடனும்  பெண்களின்  கூட்டம், இன்னும் ஏராளமான மாற்று மதத்தவர்களின் சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் -  தூக்கி பிடித்துகொண்டு ஒவ்வொரு ஊரிலும்  ஒவ்வொரு விதமாக  இந்த அனாச்சாரங்களை இஸ்லாமிய  அமல்கள் ??? !!! .... என்கிற பெயரில் படு விமரிசையாக செய்வதை பார்த்துவருகிறோம்.
இந்த செயல்கள் இஸ்லாமிய செயல்களாகவோ  அல்லது இஸ்லாமிய கலாச்சாரங்களாகவோ  முக்கியமாக  நபி வழிகளோ  கிடையாது என்பதில் உண்மையான முஸ்லிம் சந்தேகம் கொள்ள முடியுமா ?  அப்படி சந்தேகம் யாருக்காவது இருக்குமானால் இதை கீழ்காணும் இறை வசனங்களில்  அல்லாஹ் மக்களுக்கு தெளிவாக்கி எச்சரிக்கை செய்கிறான்.

முதலில் மக்கா முஷ்ரிக்குகள் அல்லாவைத்தான் நம்பினார்கள் என்பதற்கான சாட்சி இதோ  - அல்லாஹ்வின் வசனங்கள் 

10:31. “உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் “அல்லாஹ்” என பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக. 

43:87. மேலும், அவர்களிடம் யார் அவர்களைப் படைத்தது என்று நீர் கேட்டால் “அல்லாஹ்” என்றே அவர்கள் நிச்சயமாக கூறுவார்கள்; அவ்வாறிக்கும் போது (அவனைவிட்டு) அவர்கள் எங்கு திருப்பப்படுகிறார்கள்? 

29:63. இன்னும், அவர்களிடம்: ”வானத்திலிருந்து நீரை இறக்கி, பிறகு அதனைக் கொண்டு இப்பூமியை - அது (காய்ந்து) மரித்தபின் உயிர்ப்பிப்பவன் யார்?” என்று நீர் கேட்பீராகில்: “அல்லாஹ்” என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள்; (அதற்கு நீர்) “அல்ஹம்து லில்லாஹ் - புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது” என்று கூறுவீராக; எனினும் இவர்களில் பெரும்பாலோர் அறிந்துணர மாட்டார்கள்.

29:65. மேலும் அவர்கள் மரக்கலங்களில் ஏறிக்கொண்டால், அந்தரங்க சுத்தியுடன் சன்மார்க்கத்தில் வழிப்பட்டவர்களாக அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர்; ஆனால், அவன் அவர்களை (பத்திரமாகக்) கரைக்கு கொண்டு வந்து விடுங்கால், அவர்கள் (அவனுக்கே) இணைவைக்கின்றனர்.

 இந்த வசனங்களை  படித்தவுடன் நமது மக்களில் பலரும் மிக சாதரணமாக, ஏளனமாக எண்ணிக்கொள்வதும் , கோபத்துடன் கேட்பதும்....  அந்தகால மக்களும் , நாமும் ஒன்றா ? என்பதாக....  சகோதர்களே ! இங்கே நாம் அல்லாஹ்வை நம்புவது என்கிற செயலை மட்டும்தானே  ஒப்பிடுகிறோம். எனவே இந்த செயலை பொறுத்தவரையில் அவர்களும் , இவர்களும்  ஒன்றுதான் என்பதில் சிந்திக்ககூடியவர்களுக்கு நிச்சயமாக  சந்தேகம் இருக்க முடியாது , அப்படி சந்தேகம் கொண்டால்,  அல்லாஹ்வின்  எச்சரிக்கைகளை,  எக்காலத்திற்கும் பொருந்துகிற படிப்பினைகளை அலட்சியப்பத்திய குற்றத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை மனதில் கொள்வது நல்லது.
 இனி மக்கா முஷ்ரிக்குகள் சிலைகள் வழியாக நல்லடியார்கள் தங்களை அல்லாஹ்விடம் நெருக்கி வைப்பார்கள் என்பதற்காகவே வணக்க வழிபாடுகளை செய்தார்கள் இன்று இதே காரணத்தைத்தான் அவ்லியாவுக்கு வணக்க வழிபாடுகளை செய்பவர்களும் சொல்கிறார்கள். இது சம்மந்தம்மான மக்கா முஷ்ரிக்குகளை பற்றி அல்லாஹ் எப்படி எச்சரித்து நமக்கும் அந்த படிப்பினையை தருகிறான் என்பதற்கான சாட்சி இதோ  - அல்லாஹ்வின் வசனங்கள் 

39:3. அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை” (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.

39:38. வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீர்களாயின்: “அல்லாஹ் தான்!” என்று அவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள்; (நபியே!) நீர் சொல்வீராக: “அல்லாஹ் எனக்கு ஏதேனும் ஒரு கெடுதி செய்ய நாடினால் நீங்கள் (பிரார்த்தித்து) அழைக்கும் அல்லாஹ் அல்லாதவை அக்கெடுதியை நீக்கிவிட முடியுமா? அல்லது அவன் எனக்கு ரஹ்மத் செய்ய நாடினால்: அவனுடைய (அந்த) ரஹ்மத்தை அவை தடுத்துவிட முடியுமா? என்பதை நீங்கள் கவனித்தீர்களா?” (நபியே!) மேலும் நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்; உறுதியாக நம்பிக்கை வைப்போரெல்லாம், அவன் மீதே உறுதியாக நம்பிக்கை கொள்ளல் வேண்டும்.”

 மேற்காணும் வசனத்தில்  அல்லாஹ் ஒரு நன்மையையோ அல்லது ஒரு தீமையையோ  ஒரு அடியானுக்கு நாடினால் அதை தடுப்பவர் யார் ? என சவாலாக கேட்கிறான். ஆகவே என் அன்பிற்கினிய சகோதரர்களே இந்த வசனத்திலுள்ள படிப்பினையை நன்றாக யோசித்து பாருங்கள். நமக்கு அல்லாஹ்விடத்தில்  கிடைக்கும் நன்மைகளையோ அல்லது தீமைகளையோ பீரப்பா உள்பட எந்த  அவ்லியாக்களாலும்  தடுத்து விடமுடியமா? இல்லை என்னிடம்   கையேந்தி  துஆ  கேட்டிருக்கிறான்  ஆகையால்  அல்லாஹ்விடம்   வாதாடி நன்மைகளை   கூடுதலாக   வாங்கி  கொடுப்போம்  என  அவ்லியா  தீர்மானிப்பாரா ? அதுபோல   கையேந்தாதவர்களுக்கு  நன்மைகள்  கிடையாது , அல்லாஹ்விடம்   சொல்லி  தீமைகள் வாங்கி  கொடுப்போம்  என  தீர்மானித்திக் கொள்வாரா ? அவ்லியாவிடம்  துஆ  செய்யும் அன்பர்களே  கொஞ்சம்  சிந்தனை  செய்து  பாருங்கள் .

இன்றைக்கு தக்கலை பீரப்பா அவ்லியாவிடம் வேண்டுகிறோம் , இன்னுமொரு  சந்தர்ப்பத்தில் திருவிதாங்கோட்டு அவ்லியாவிடம் வேண்டுகிறோம்,   பீமாத்தாயிடம்  வேண்டுகிறோம், ஆற்றங்கரைத்தாயிடம்  வேண்டுகிறோம்  ,  ஏர்வாடி அவ்லியாவிடம்  வேண்டுகிறோம்  , நாகூர் நாயகம் ? அவர்களிடத்தில்  வேண்டுகிறோம் இப்படி நாம் போகிற ஊர்களில்   எல்லாம் இந்த வேண்டுதல் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. கொஞ்சம் யோசித்து பாருங்கள். இவர்கள் எல்லாம் உங்களுக்காக  அல்லாஹ்விடத்தில் முறையிடுவார்கள் என நினைக்கிறீர்களா ?   

லட்சக்கணக்கான  மக்கள் இப்படி  ஒவ்வொரு அவ்லியாக்ககளிடமும்  முறையிட்டுக் கொண்டேயிருந்தால் இதை  எல்லாம்  எந்த அளவுக்கு இன்னார் இன்னாருக்கு   என இந்த அவ்லியாக்கள் நினைவில்  வைத்து அல்லாஹ்விடம் உங்களுக்காக நீங்கள்  அந்த அவ்லியாவுக்கு கொடுத்த நேர்ச்சைக்காக, உண்டியலில் பணம் போட்டதற்காக, ஆடு, மாடு, கோழி அறுத்து பலியிட்டதற்காக, ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்ததற்காக, கப்ரை  தொட்டு முத்தியதற்காக, குழந்தைக்கு  அவரின் பெயர் சூட்டியதற்காக , காணிக்கைகளை வாங்கி தின்றதற்காக, ஞானப்புகழ்ச்சி பாட்டை விடிய விடிய கண் விழித்து பாடியதற்காக, கப்றையும் அதை சுற்றியுள்ள இடங்களை அலங்காரப்படுத்தியதற்காக, பெட்டி பெட்டியாக சோறு ஆக்கி கொடுத்ததற்காக, வீட்டில் எந்த விசேஷம் ஆனாலும் மறக்காமல் தரிசித்து ஆசி வாங்கி சென்றதற்காக, ஹஜ்ஜுக்கு செல்லும் போதும், வந்திறங்கிய போதும் ஆசி வாங்கி சென்றதற்காக, நோய் வந்தால் ரூம் எடுத்து தங்கி அருகிலே இருந்து அருளை பெற்றுக்கொண்டதற்காக, இப்படி ஒவ்வொன்றுக்கும்  அவ்லியாவின் அருள்  ஆசியோடு வாழ்க்கையில் நடந்ததற்காக  அல்லாஹ்விடத்தில்  வாதாடுவார்களா? எத்தனை  அவ்லியாக்கள் உங்களுக்காக, லட்சக்கணக்கான  மக்களுக்காக   அல்லாஹ்விடத்தில் எந்த நேரத்தில் சிபாரிசு செய்வார்கள் ? எந்தெந்த வேண்டுதல்களை எந்தெந்த அவ்லியாக்கள் எப்போது அல்லாஹ்விடத்தில் சிபாரிசு செய்து தரமுடியும் என நினைக்கிறீர்கள்? அன்பிற்கினிய சகோதர்களே கொஞ்சம் சிந்தனையை தூண்டி சிந்தித்து பாருங்கள் இப்படிப்பட்ட ஆற்றல்கள் இந்த அவ்லியாக்களுக்கு இருப்பதாக  நீங்கள் நம்பினால்?...........?????????? !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இன்ஷா அல்லாஹ்  -   பாகம் மூன்றில் மீண்டும் விரைவில்  சந்திக்கலாம் - தெளிவை நோக்கி இன்னும் விரிவாக விவாதிக்கலாம்.


குறைகள் என்னை சாரும் நிறைகள் ஏக இறைவனை சாரும்………………….
ü     படைக்கப்பட்டவர்களை விட்டு, விட்டு படைத்தவனை மட்டுமே  வணங்குவோம்  !
ü     அல்லாஹ்வும் ரசூல் (ஸல்) அவர்களும் காட்டித்தந்த நேர்வழியை பின்பற்றுவோம் !
ü     அல்லாஹ்வின் கட்டளை - நமது  கடமை - நன்மையை ஏவி தீமையை தடுப்போம் !


From: haiderghouse@hotmail.com
To: hassaj60@hotmail.commohammedrafi@etaascon.com
Subject: பாகம் -1.......தக்கலை பீரப்பா அவ்லியா...... தர்ஹா வழிபா(கே)டா ???!!!
Date: Sun, 5 Jun 2011 13:38:24 +0000

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
Respected Brothers of Islam, Assalaamu alaikkum.
May peace, mercy and blessings of Allaahu subhaana huvvata'ala be with you all.
By the grace Allah, this email will meet you in good health and good mood and I pray for that

பாகம் -1.......தக்கலை பீரப்பா அவ்லியா...... தர்ஹா வழிபா(கே)டா ???!!!

2007 ல்  எனக்கு  வந்த  மெயில் - 

From: Sender name is apprehended for a good cause .  To: TKY <tky_muslims@yahoogroups.com>
Sent: Wed, July 25, 2007 4:13:21 PM, Subject: [tky_muslims] Peerappaa Durga.

கீழ்காணும்  செயல்களை  பலரும்  இதெல்லாம்   தவறு  என்று   தெரிந்து கொண்டதால்    இச்செயல்களிலிருந்து  மாறி  உண்மையான தவ்ஹீதை  பின்  பற்றி  வருகிறார்கள் . ஆனால்   அவ்லியாக்களை  தொடர்ந்து  ஆராதித்து  வருபவர்கள்   இன்னும்  இச்செயல்களை  படு  விமரிசையாக  செய்து  வருகிறார்கள்  என்பது  உண்மையே.  இனி  அவ்லியாக்களை  தொடர்ந்து  ஆராதித்து   வருபவர்களின் அன்றாட செயல்களை  2007 ல்  எனக்கு  வந்த  மெயில் அவர்களில்  ஒருவரே  பெருமிதத்துடன் சந்தோஷமாக  பட்டியலிட்டிருப்பதை  பார்ப்போம்

1) தர்காவுக்கு சுபுஹூத் தொழுகைக்குப் பின்னும், மக்ரிப் தொழுகைக்குப் பின்னும் மக்கள் துஆக் கேட்டுச் செல்வதுண்டு.
  2) வியாழன் , ஞாயிறு -- மாலை சென்று இரவு நேரங்களில் மக்கள் அதிகமாக வந்து இறைஞ்சிச் செல்வதுண்டு.
 3) இரு பெருநாள் தொழுகைக்குப் பின்னர் மக்கள் ஒன்று திறண்டு வந்து தக்பீர் முழக்கத்துடன் தர்கா வந்து இறைஞ்சி செல்வதும் வழக்கமே.  
4) சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு வேலை நாடிச் செல்பவர்கள் தற்கா வந்து சியாரத் செய்து செல்வது வழக்கம்.  
5) குழந்தைகளுக்கு அப்பாவின் தற்காவில் வைத்து பெயரிடுவது வழக்கம். பொதுவாக பீர் முஹம்மது, பீரும்மாள், மைதீன் பீர் முஹம்மது, மைதீன் பீரும்மாள் என்றே பெயரிடுவதைக் காணலாம்.  
6) மணவிழாக் காலங்களில் மணமக்கள், வீட்டிலிருந்து புறப்பட்டு நேராக தர்கா வந்து துஆச் செய்து பின்னர் நிக்காஹூ மேடை அழைத்து செல்லப்படுவார்கள். நிக்காஹூ முடிந்து விருந்துபசாரத்திற்குப் பின் மணமக்கள் தம்பதி சகிதமாக தர்கா வந்து இறைஞ்சி செல்வது வாடிக்கை.  
7)மணவிழாக் காலங்களில் ஊர் பாடல் குழுக்களால் பைத்துக்கள் பாடி மணமகனை தர்காவுக்கு அழைத்து வருவதும் வழக்கமே.  
8) குழந்தைகளுக்கு சுன்னத் என்னும் "கத்னா" செய்வதர்க்கு முன்னும், ஏழு நாள் கழித்து தலை குளித்து புத்தாடை உடுத்தி புதுமணத்தோடு குழந்தைகள் தர்கா வந்து செல்வது வழக்கம்.  
9)நேர்த்தி கடனை அல்லாஹூவின் பெயரில் தற்காவில் வைத்து செய்பவர்கள் பலருண்டு 

தக்கலை பீரப்பா தர்ஹாவில் , தக்கலை வாழ் மக்கள் அன்றாடம் நன்மை? என்கிற நம்பிக்கையில் செய்து கொண்டிருக்கும் மேற்கண்ட  செயல்களைத்தான்  தக்கலையை  சார்ந்தவர்  ( நான் இங்கே பெயர் குறிப்பிட விரும்ப வில்லை )  மிக உற்சாகத்துடன், பக்தியுடன் ,ஆர்வத்துடன்  அவ்லியாவின் ஆண்டுப்பெருவிழா, கோலாகாலமான  திருவிழாவை முன்னிட்டு  மிகவும் சரியான சமயத்தில் மக்கள் பலருக்கும்  நினைவூட்டி  மகிழ்ந்திருப்பதாகவே  எண்ணத் தோன்றுகிறது  - அஸ்தஃபிருல்லாஹ்......இது சம்மந்தமாக நம் மனதில் எழும் இஸ்லாமிய  அடிப்படையிலான  கேள்விகள் ?

1.    இது சரியான இஸ்லாமிய வழிமுறையா? அல்லது வழிகேடா ?
2.     இந்த செயல்    நன்மையா ? அல்லது  தீமையா  ?    
3.    ஏன் இவர்கள் தொழுகையில் அல்லாஹ்விடம் துஆ கேட்டுவிட்டு , பின்னர் பீரப்பா அவ்லியாவிடமும் சென்று துஆகேட்கிறார்கள் ?
4.    அல்லாஹ்வை முழுமையாக நம்பாமல் , ஏன் அவ்லியாவிடம் சிபாரிசுக்காக  போய்  அவருடைய சமாதியின் முன் நின்று துஆகேட்கவேண்டும் ?
5.    அல்லாஹ்வின் எச்சரிக்கைகளும் படிப்பினைகளும் இவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லாமல் ஆகிவிட்டதா?
6.    ரசூல் (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகளும், தடுத்தவைகளும் தெரியாத சூழ்நிலையில் இருக்கிறார்களா? 
7.    ஆலிமாக நியமிக்கப்பட்டவர்  இதுவிஷயங்களை மக்களுக்கு விளக்காமல்  அலட்சியமாக இருந்து கொண்டிருக்கிறாரா ?
8.    ஆலிமுக்கு தெரிந்திருந்து வேண்டுமென்றே பாராமுகத்துடன் இருந்து கொண்டிருக்கிறாரா ?
9.    ஆலிமே இதை  செய்து மற்றவர்களுக்கும் முன்னுதாரணமாக இருந்து கொண்டிருக்கிறாரா?  
10.  ஆலிம் அப்படி செய்திருந்தால் அது  பாவசெயல்  ஆகிவிடாதா? ஒரு சமூகத்தையே பாவ செயல்களில் மூழ்கடித்ததாக ஆகிவிடாதா ?
11.  இதை பின்பற்ற கூடியவர்கள் இதெல்லாம் ஏன் சிந்திக்க தவறி விட்டார்கள் ?

சகோதரர்களே! இது பற்றி அல்லாஹ்வின் வசனங்களில் நமக்கு கிடைத்த எச்சரிக்கை களையும் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய படிப்பினைகளையும், ரசூல் (ஸல்) அவர்களின் போதனைகளையும், ரசூல் (ஸல்)அவர்கள் தடுத்த வழிகேடுகளையும்  ஆதாராமாக வைத்து ஆராய்ந்து பார்ப்போம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: - பிரார்த்தனை (துஆ) ஓர் வணக்கமாகும். என்னை அழையுங்கள். நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன் என்று உங்கள் இறைவன் கூறுகிறான். (அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் -ரலி, நூல்: அபூதாவூத், திர்மிதி.-இதிலிருந்து நமக்கு தெளிவாக புரிவது துஆ என்பது ஒரு வணக்கம் ஆகும். வணக்க வழிபாடுகள் யாவும்  அல்லாஹ் ஒருவனுக்கே செய்யவேண்டும் இதுதான் தவ்ஹீத் என்கிற ஏகத்துவம். மற்ற   யாருக்கும் அவ்லியாக்கள் உள்பட  இந்த வணக்கத்தை (துஆவை) கண்டிப்பாக செய்யக் கூடாது என்பதுதான் இந்த ஹதீஸின் பொருள் என்று சிந்திக்கக்கூடியவர்களால்  மிகத் தெளிவாக  விளங்கிக் கொள்ளமுடியும். 

ஆனால் இங்கே மக்கள் துஆ அதாவது பிரார்த்தனை ஒரு வணக்கம் என்று ரசூல் (ஸல்) அவர்கள் சொல்லிதந்ததை அறிந்து கொள்ளாத காரணத்தாலோ  அல்லது தெரிந்தும்  பாராமுகமாக  ஆகிவிட்டதாலோ, அல்லது இதுவும் நன்மைதான் என்கிற கண்மூடித்தனமான நம்பிக்கையிலோ அல்லது தெரிந்தோ, தெரியாமலோ  அல்லாஹ்வுக்கு  மட்டுமே செய்யக்கூடிய  வணக்கமான துஆவை  ( பிரார்த்தனையை), அவனிடம் மட்டுமே கேட்கக்கூடிய   பிரார்த்தனையை இங்கே  இந்த பீரப்பா   அவ்லியாவிடமும் கேட்கக்கூடிய நிலைமை  தொடர்ந்து  கொண்டேயிருக்கிறது  ???

இது பற்றி கேட்டால் நாங்கள் அவ்லியாவிடம் நேரடியாக கேட்கவில்லை  எங்கள் பிரச்சினைகளை அவ்லியாவிடம்  முறையிட்டு அல்லாஹ்விடம் சிபாரிசு செய்ய சொல்லி அல்லாஹ்விடமே  துஆ கேட்கிறோம் என்ற பதில்தான் எல்லோரிடமிருந்து கிடைக்கிறது. 
இன்ஷா அல்லாஹ்  -   பாகம் இரண்டில் மீண்டும் விரைவில்  சந்திக்கலாம் - தெளிவை நோக்கி விரிவாக விவாதிக்கலாம்.

நன்மையிலும் பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும், பகைமையிலும் நீங்கள்ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம். அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாகதண்டிப்பவன். (குர்ஆன் 5:2)

வஸ்ஸலாம்  
சிந்திக்க தூண்டும் உங்கள் சகோதரன் 
தக்கலை கவுஸ் முஹம்மது – பஹ்ரைன்



குறைகள் என்னை சாரும் நிறைகள் ஏக இறைவனை சாரும்………………….
ü     படைக்கப்பட்டவர்களை விட்டு, விட்டு படைத்தவனை மட்டுமே  வணங்குவோம்  !
ü     அல்லாஹ்வும் ரசூல் (ஸல்) அவர்களும் காட்டித்தந்த நேர்வழியை பின்பற்றுவோம் !
ü     அல்லாஹ்வின் கட்டளை - நமது  கடமை - நன்மையை ஏவி தீமையை தடுப்போம் !
 
 

-- 
நம் குழுமம் குறித்து : http://groups.google.com/group/tamilmuslimbrothers?hl=en
 
இக்குழுமத்தில் உங்களுக்கு மெயில் அனுப்ப முடியவில்லையா? உடனடியாக tamilmuslimbrothers@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

Reply
MOHAMED MUSTHAFA to tamilmuslimbro.
show details 4:16 PM (18 hours ago)
(அறிவுடையோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள் வெற்றியடைவீர்கள்).

என்னை பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால், நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னை பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்கு பதிலளிக்கிறேன் . இதனால் என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும். என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்.
திருக்குர்ஆன் சூரா அல்-பகரா 02 : 186


அல்லாஹ்வையன்றி நன்மையும் தீமையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். அவர்கள் அல்லாஹ்விடம் "எங்களுக்காக பரிந்துரை செய்பவர்கள்" என்றும் கூறுகின்றனர். வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்கு  தெரியாததை அவனுக்கு சொல்லி கொடுக்குறீர்களா? அவன் தூயவன், அவர்கள் இணை கற்ப்பிப்பதை விட்டும் அவன் உயர்ந்தவன்.  என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் சூரா யூனுஸ் 10 : 18


( இறைவன் , அவனிடமே பிரார்த்தனை செய்ய சொல்கிறான். அவனையே நம்ப சொல்கிறான். இப்படி செய்தால் அவர்கள் நேர் வழியும் பெறுவார்கள் என்றும் இறைவன் கூறுகிறான். இந்த மாதிரி வசனங்கள் எல்லாம் குர்ஆனை தமது தாய் மொழியில் படித்தால்தானே தெரியும். சிறிய வயதிலேயே பிற மத கலாச்சாரத்தில் உள்ள மக்களோடு போட்டி போட்டு முன்னேற கற்று கொடுக்கும் பெற்றோர்களை என்னவென்று நொந்து கொள்வது! பரிந்துரைக்காக தான் அவ்லியாக்களிடம் போகிறார்கள் என்று அல்லாஹ்வும் சுட்டிக்காட்டுகிறான். இதெல்லாம் அவனுக்கே தெரியாததா? அப்படி அது உண்மையாக இருந்தால் நானே உங்களுக்கு சொல்லி கொடுத்திருப்பேன் என் தூதர் மூலமாக! என்பது போல் அல்லாஹ்வுக்கு தெரியாததை அவனுக்கு  கற்று கொடுக்கிறீர்களா? என்றும் கேட்கிறான். இவர்கள் இப்படி செய்து அல்லாஹ்வுக்கும் தூதர்க்கும் தெரியாத அவ்லியாக்களிடம் துவா என்கிற விஷயத்தை அல்லாஹ்வுக்கே கற்று கொடுக்கிறார்கள் போலும்! இப்படித்தானே இருக்கிறது இவர்களின் பதிலும், கேள்வியும்! ஆக! பிள்ளைகளின் சிறிய வயது பருவ அறிவாற்றல்தான் பின்னாளில் மின்னுகிறது, தர்கா, அவ்லியா, நேர்ச்சை, மரம், மட்டை, இன்னும் எண்ணற்ற முறையில் உள்ளது மட்டும் இணை வைப்பு இல்லை, மாறாக, இஸ்லாத்திற்கு எதிராக உள்ள மாற்று மத சிந்தனையின் செயல்பாடுகளும் இணை வைப்புதானே?  தவ்ஹீத் சிந்தனை கொண்ட சகோதர சகோதரிகளும் தங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அசாதாரணமாக இருந்து விட வேண்டாம். அல்லாஹ் பாதுகாப்பானாக! முக்கியமாக! டி.வி  மற்றும் இரு பாலினர் சேர்ந்து படிக்கும் கல்லூரி, பள்ளிக்கூடம் விஷயத்தில் நாம் நிராகரிப்பதே மிகச் சிறந்தது. டி.வி. யினால் சமுதாயம் சீரழிகிறது  என்று இஸ்லாம் அல்லாதவர்களே வாதாடுகிறார்கள்! இந்த அறிவியல் முன்னேற்றத்தால் மக்களை அழிவு பாதைக்கு கொண்டு செல்ல நமது எதிரிகள் யூத, கிறித்தவர்கள் மிகவும் பாடு படுகிறார்கள். ஜாக்கிரதையாக இருந்து சொர்கத்திர்க்காக வெற்றியடைவதர்க்காகவே வல்ல நாயன் ரப்புல் ஆலமீன் நமக்கு வேதத்தை தந்திருக்கிறான். நமக்குண்டான எதிரிகளை பற்றி எண்ணற்ற வசனங்கள் மூலம் நமக்கு அவர்களை அடையாளம் காட்டி இருக்கிறான். நமது அன்பு இறைவன்! அதை படித்து தெளிவு பெறுவோம் இன்ஷா அல்லாஹ்.)

நீங்கள் நம்பிக்கை கொண்ட பின்பு உங்களை (இறை) மறுப்போராக மாற்றிட வேதம் கொடுக்கப் பட்டோரில் பெரும்பாலானோர் ஆசைப்படுகின்றனர். உண்மை அவர்களுக்கு தெளிவான பின்பு அவர்களிடம் ஏற்ப்பட்ட பொறாமையே இதற்கு காரணம்!
திருக்குர்ஆன்  சூரா அல் - பகரா 02 : 109


உண்மை அவர்களுக்கு தெரிந்தும் நம்மை வழி கெடுக்க முனைகிறார்கள் என்றால் எப்படி பட்ட மனநிலை கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால், மாற்று மதத்தினருடன் காதல் என்ற போர்வையில் நமது சகோதரிகளை இஸ்லாத்தை விட்டு தூக்கி எறிந்திருக்கிறார்கள். எரிந்து கொண்டும் இருக்கிறார்கள். இனிமேலும் எறிவார்கள். இதற்க்கு பெற்றோர்கள் முழு முதல் காரணம் என்பதையும் மறந்து விட கூடாது! இந்த சத்திய மார்கத்தை பின்பற்றவும், எடுத்து வைக்கவும் முன்வருவோமாக! இன்ஷா அல்லாஹ். 

No comments:

Post a Comment